கைபேசி செயலி மூலம் மாணவர் வருகைப் பதிவு செய்யும் போது, இணைய தள இணைப்புக்கான டவர் சிக்னல் கிடைக்கா விட்டால், அது பற்றி கவலைப்பட தேவையில்லை.

 இதற்காக பள்ளியின் மேல் தளத்திற்கு ஏணி மூலம் ஏறிச் செல்ல வேண்டியதில்லை.

offline லேயே, பதிவு செய்யலாம்.

வருகைப் பதிவு விவரம், பதிவு செய்த இடம், நேரம் இவை அனைத்தும் மாணவர் வருகைப் பதிவு செயலியில் பதிவாகும்.

 மொபைல் டேட்டாவை ஆன் செய்து வைத்திருந்தால், சிக்னல் கிடைக்கும் போது, offline ல் பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் தானாகவே ஆன்லைன் மூலம் பதிவேற்றமாகும்.

ஒரு வேளை பள்ளி செல்போன் சிக்னலே கிடைக்காத இடத்தில் அமைந்திருந்தால், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கூட , செயலியின் முகப்பு பக்கத்திற்கு சென்று, synchronize செய்து கொள்ளலாம். இதை இரவு 10 மணிக்குள் செய்து விட வேண்டும்.

அதன் பிறகு synchronize செய்தால், அன்றைய தகவல்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பில்லை.

ஆகவே ஆசிரியர்கள், சிக்னல் கிடைக்க வில்லை என்றால், பயப்படவோ, அபாயகரமான கட்டிடங்களின் மீது ஏறி நின்றோ தங்கள் உயிரை பனையம் வைக்கத் தேவையில்லை.

கூடுதல் தகவல் வேண்டுமென்றால், வருகைப் பதிவு செயலியின், வலது புறத்தின் மேல் பகுதியில் உள்ள 3 கோடுகளை தொட்டால் பல்வேறு மெனுக்கள் வரும்.

 இதில் help என்ற பகுதியை தொட்டால், Screen Shot மூலம் விளக்க சிலைடு வரும்.

சிலைடின் வலது புற கீழ்ப் பகுதியில் வலப்பக்க குறியிட்ட அம்புக் குறி வரும். இதை தொடர்ந்து அழுத்த, 12 விளக்க சிலைடுகள் வரிசையாக வரும். இதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Whats App Group link