தமிழக அரசு, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. இதனையடுத்து, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகள், மருத்துவமனைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு துவக்கப்பள்ளிகளில், மாணவர்கள் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் பைகள் பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது; பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பதைமாணவர்களுக்கு எடுத்துரைக்குமாறு, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.தொண்டாமுத்துார் வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீகலா கூறுகையில், ''மாணவர்கள் பள்ளிகளில் பிளாஸ்டிக் பை, வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களை, கொண்டு வரக்கூடாது என, தலைமையாசிரியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில், காய்ச்சிய நீரை மாணவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Whats App Group link