*தற்போது பணி புரிந்து வரும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் ஜுன் 2019 முதல் உயர் நிலை/மேல்நிலை ப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாற்றம் செய்யப்பட உள்ளனர். அப்பதவியில்  மேனிலைப் பள்ளி தலைமைஆசிரியரை நியமிக்க அரசு ஆலோசித்து வருகிறது. ஏனெனில் தற்போது பணிபுரியும் அனைத்து BEOகளும் (நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் தகுதி கொண்ட அவர்கள்) வட்டாரத்தில் உள்ள உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளைப் பார்வையிட தகுதி இல்லாத காரணம் மற்றும் வட்டார கல்வி அலுவலகத்தை அரசு அதிகாரம் மிக்க அனைத்துப் பள்ளிகளையும் பார்வை,ஆய்வு,தணிக்கை, ஊதியம் வழங்கும் அலுவலகமாக மாற்ற உள்ளது.வரும் கல்வி ஆண்டில் ஜூன் முதல் இதைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.*