ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்துப் பேசாமல், அவர்களை கைது செய்வதை கண்டிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக, தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராடி வருவதாக கூறியுள்ளார். மேலும், அரசு ஊழியர்களை அலட்சியப்படுத்தி, பொது மக்களை வாட்டி வதைக்காமல், போராடுவோரை முதலமைச்சர் அழைத்துப் பேசி உடனடி தீர்வுகாண வேண்டும் என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.