ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை தவிர்க்க, சங்க நிர்வாகிகளுடன், அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட உள்ளது.அரசு ஊழியர்கள்
மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ ஜியோ சார்பில், வரும், 22ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆயத்தமாக, மாநிலம் முழுவதும், இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.இதையடுத்து, பணிகளை புறக்கணித்து, மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், லோக்சபா தேர்தல் மற்றும் பள்ளி பொது தேர்வு வருவதால், அவற்றிற்கான பணிகள், ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து, அரசு தரப்பில் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, துறை ரீதியாகவும், பின், அரசின் உயர் அதிகாரிகள் மட்டத்திலும், பேச்சு நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது

Whats App Group link