சென்னை: தமிழகத்தில் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.
விழுப்புரத்தை விட்டு பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி.
சட்டப்பேரவையில் வெளியிட்ட 251 அறிவிப்புகளில், 221 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன, 30 அறிவிப்புகளுக்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடங்கும்
விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைய உள்ள கள்ளக்குறிச்சி, தமிழகத்தில் 33-வது மாவட்டமாக உதயமாகிறது.

Whats App Group link