இதுவரை 4 விஞ்ஞானிகள் இரண்டு முறை நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள், . 2 முறை நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர் போலந்து நாட்டைச் சேர்ந்த, பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற விஞ்ஞானி மேரி க்யூரி. 1903-ம் ஆண்டு இயற்பியலுக்கு ஹென்றி பெக்யூரல், பியரி க்யூரியோடு சேர்ந்து இந்தப் பரிசைப் பெற்றார் மேரி. 1911-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
அதிக நோபல் பரிசுகளைப் பெற்ற குடும்பமும் இவருடையதுதான். இவரது மகள் ஐரின் க்யூரியும் அவரது கணவரும் நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்க விஞ்ஞானி ஜான் பார்டீன் 1956, 1972-ம் ஆண்டுகளில் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றிருக்கிறார். இயற்பியல் துறையில் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற ஒரே நபர் இவரே. லைனஸ் பாலிங் என்ற அமெரிக்க விஞ்ஞானி 1954-ம் ஆண்டு வேதியியலுக்கும் 1962-ம் ஆண்டு அமைதிக்கும் நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரெட்ரிக் சாங்கர் 1958-ம் ஆண்டும் 1980-ம் ஆண்டும் வேதியியலுக்கான நோபல் பரிசுகளைப் பெற்றார். வேதியியலில் இரு முறை நோபல் பரிசுகளைப் பெற்றவர் இவர்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..