*⚡மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணை இன்று 28.01.2019 மாலை 3.30 மணியளவில் நீதிபதி _கே.கே.சசிதரன், சாமிநாதன்_ - அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.*

*⚡தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் முழுவதுமாக முடங்கியுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்*

*⚡ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை அழைத்து சுமூக தீர்வு எட்ட ஏன் பேச்சு நடத்த கூடாது தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி*

*⚡தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் அறிவிப்பு*

*⚡தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது, இந்த நியமனம் மூலம் புதிய பிரச்சினை தொடங்கப்பட்டுள்ளது.*

*⚡தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்தினால் அவர்களும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவார்கள் (அ) நீதிமன்றம் வருவார்கள் - உயர்நீதிமன்றம் கருத்து*

*⚡அரசு மற்றும் ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசித்து தங்களது கருத்தை  சற்று நேரத்தில் தெரிவிக்க வலியுறுத்தல்...  அதுவரை வழக்கு சற்று நேரத்திற்கு  ஒத்தி வைப்பு.*

*⚡நீதிமன்றம் - ஜாக்டோ ஜியோ சார்பாக கருத்து கூற விரும்பவில்லை.*

*⚡நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும். என்றும் உயர் நீதிமன்ற கிளை கூறியது.*

*⚡கோரிக்கைகள்தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - உயர்நீதிமன்றம் கருத்து*

*⚡வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.*

*⭐மதுரை உயர்நீதிமன்றத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. போராட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு. ஆகவே போராட்டம் தொடரும். எந்த வடிவிலான போராட்டம் என்பதை தற்பொழுது ஜேக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு அறிவிக்க உள்ளது..*