பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்துடன் சேர்ந்து, மூன்று சங்கங்கள் இன்று முதல், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் போராட முடிவெடுத்துள்ளன.ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், கடந்த 22ம் தேதி முதல், காலவரையற்ற போராட்டம் நடக்கிறது. மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கைது செய்து, சிலரை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நிலையிலும், போராட்டம் மேலும் வலுக்க துவங்கியுள்ளது.பொதுத்தேர்வுக்கு இன்னும், 33 நாட்களே உள்ளதால், அரசு மாற்று ஏற்பாட்டில் தீவிரம் காட்டி வருகிறது.