*சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்
தி.மு.க., - தங்கம் தென்னரசு
*சென்னையில், புத்தகக் கண்காட்சி நடக்கிறது. தமிழில், புதிய நூல்கள் வெளிவர, பதிப்பகத்தாரை ஊக்குவிக்க வேண்டும்.புதிய நூல்களை, நூலகங்களுக்கு கொள்முதல் செய்ய, தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளதா; சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, புதிய நூல்கள் வாங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
அமைச்சர், செங்கோட்டையன்
*பதிப்பகங்களில் இருந்து, புதிய நூல்கள் வாங்க, குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய நூல்களை கொள்முதல் செய்ய, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நூல்கள் வாங்க, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, ஸ்டுடியோவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
*அந்த ஸ்டுடியோவில், சிறந்த ஆசிரியர்களை பயன்படுத்தி பாடம் நடத்தி, அதை வீடியோவில் பதிவு செய்து, 'யு டியூப்' வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, முடிவு செய்துள்ளோம்
*பள்ளி மாணவர்கள், தங்கள் மொபைல் போன்களில், அவற்றை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். 'சிடி'யாக வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்
*அதேபோல், ஓலைச்சுவடிகளில் உள்ளதை, புத்தகமாகவும், 'சிடி'யாகவும் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..