தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை பிறப்பித்த அரசாணை விவரம்:
தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் பதவியில் தன்னை நியமிக்குமாறு, ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி எம்.அண்ணாதுரை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், அவரை தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சிலின் துணைத் தலைவர்-2 பதவியில் நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது. அவர் கடைசியாக பெற்ற சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தின் அடிப்படையில், ரூ. 1 லட்சம் மாத ஊதியமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஊதியம், கவுன்சிலுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து அவருக்கு வழங்கப்படும்.
இவர், இந்த கவுன்சில் மீதமுள்ள காலம் வரை அல்லது அதன் செயற்குழு மாற்றியமைக்கப்படும் வரை அதன் துணைத் தலைவர்-2 பதவியில் வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது