பேருந்து கல்வீச்சு வழக்கில் மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்ற தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது துறையை கவனித்து கொள்வது யார்? என்பது குறித்த ஆலோசனை இன்று நடந்தது.
இந்த ஆலோசனையின் முடிவில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இனி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்புடன் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பையும் அவர் கவனித்து கொள்வார் செங்கோட்டையன் பள்ளிக்கல்வி துறை அமைச்சரான பின்னர் யூனிபார்ம் முதல் பாட திட்டங்கள் பல மாற்றங்களை கொண்டு வந்து அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றார்.
அந்த வகையில் இனி விளையாட்டுத்துறையும் இவரது கையில் இருப்பதால் தமிழக விளையாட்டு வீரர்கள், மற்றும் வீராங்கனைகளுக்கு நன்மையாக இருக்கும் என கருதப்படுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..