சென்னை: வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு, எதற்காக பொங்கல் பரிசு பணம் வழங்குகிறீர்கள்? வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் எதற்காக பொங்கல் பரிசு பணம் என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது.

அதேநேரம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு, பொங்கல் பரிசு தொகை வழங்கலாம் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதேபோல அந்தியோஜனா திட்டம் கொண்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பரிசுத் தொகை வழங்க அனுமதி அளித்துள்ளது ஹைகோர்ட்.
ரேஷன்கார்டுகளில், PHH/PHH-AAY/NPHH/NPHH-S என்ற குறியீடுகளில் ஏதாவது உங்கள் ரேஷன் கார்டில் இடம் பெற்றிருந்தால், நீங்களும் பொங்கல் பரிசு வாங்க தகுதியுடையவர்களாகும். அல்லது, பொங்கல் பரிசு தொகை கிடைக்காது.

source: oneindia.com

Whats App Group link