பின்லாந்து நாட்டில் தாய் மொழிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அங்குள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள்- மாணவர்களிடையே நல்ல புரிந்துணர்வு உள்ளதாக அங்கு சுற்றுலா சென்றுவந்த தமிழக மாணவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் சிறந்து விளங்கிய 50 மாணவ, மாணவிகள் கடந்த 21-ஆம் தேதி பின்லாந்து, ஸ்வீடனுக்கு கல்விப் பயணம் மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டது.
இந்நிலையில் பயணத்தை முடித்து திரும்பிய மாணவர்கள் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Whats App Group link