பாம்பு புற்றைக் கட்டுவது எப்படி?
– அ.ரா. அன்புமதி, 5-ம் வகுப்பு, மைக்கேல் ஜாப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சூலூர், கோவை.



 பாம்புகள் புற்றுகளைக் கட்டுவதில்லை, அன்புமதி. பெரும்பாலான பாம்புகள் கறையான் புற்றுகள், கொறிவிலங்குகளின் வளைகள் போன்றவற்றில்தான் குடியிருக்கின்றன. சாண்ட்போவா போன்ற ஒரு சில பாம்புகள், தங்குவதற்கு இடம் கிடைக்காதபோது தாங்களாகவே வளையை உருவாக்கிக் கொள்கின்றன. கறையான் புற்று குளிர்க் காலத்தில் கதகதப்பாகவும் கோடைக்காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். அதனால் பாம்புகள் அழையா விருந்தாளிகளாக இந்தப் புற்றில் குடியேறிவிடுகின்றன

Whats App Group link