மழை வருவதற்கு முன் மயில் தோகை விரித்து ஆடுவது ஏன், ?
– மு. ஜீவஹரிணி, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.




மழையை வரவேற்கவோ மழையை ரசித்தோ மயில் தோகையை விரித்து நடனம் ஆடுவதில்லை, ஜீவஹரிணி. பெண் மயிலைக் குடும்பம் நடத்துவதற்கு அழைப்பதற்காகவே, அழகான தன் தோகையை விரித்து நடனமாடுகிறது ஆண் மயில். ஏப்ரல் முதல் செப்டம்பர்வரை இனப்பெருக்கக் காலம் என்பதால், ஆண் மயில்கள் தோகை விரித்து ஆடுவதை இந்தக் காலத்தில் அதிகம் காணலாம்.

Whats App Group link