ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது பற்றி கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை,
வட்டாரக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்த்தியதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது குறித்து ஆணை வெளியிடுவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தார்.