மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், 2018-19ம் கல்வியாண்டு முதல் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் தனியார் பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 கட்டணம், 8ஆம் வகுப்புக்கு ரூ.100 கட்டணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்தாண்டே நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் காட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை தற்போது அமலில் உள்ளது. அப்படியும் தேர்ச்சி என்று இருப்பதால் மாணவர்கள் படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்துவதில்லை என்றும் இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறி வந்தது. அதற்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு  5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. அது மட்டும் இல்லாமல், மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையினை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இந்த புதிய முறைக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டாய தேர்ச்சி என்பதால் மாணவர்கள் அதிகபட்சமாக 8ம் வகுப்பு வரையும் படிப்பார்கள், பொதுத்தேர்வு வைத்து மாணவர்களை வடிகட்டினால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பரிசீலனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்தாண்டே நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித்துறை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Whats App Group Link -Click Here