ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. அதே நேரத்தில் அதற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் வருமான வரி கட்ட வேண்டும் என்பது கட்டாயம். இந்த நிலையில் அவர்கள் வருமான வரி கட்டாமல் இருக்க மத்திய அரசு வேறு வகையான வழிகாட்டலையும் அறிவித்துள்ளது.
இடைக்கால மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்தால், அதில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.
5 லட்சம் வரை உள்ளவர்கள் வருமானவரி செலுத்த தேவையில்லை.
ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சமாக உள்ளவர்கள் ரூ. 1.5 லட்சத்தை குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாதம் 54 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுபவர்கள் மாதாமாதம் 12 ஆயிரத்து 500 வீதம் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம்.
ஆண்டு வருமானம் 6.5 லட்சம் இருப்பவர்கள் பி.எஃப், நிர்ணயிக்கப்பட்ட பங்குகளுகளில் முதலீடு செய்தால் வரி செலுத்த வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது