தற்காலிக ஆசிரியராக பணிபுரிய விண்ணப்பித்த, 3 ஆயிரத்து 800 பேரில், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் காலங்களில் வாய்ப்பு அளிக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், கடந்த மாதம் 22 முதல், 30ம் தேதி வரை, தொடர் போராட்டம் நடந்தது.

 பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கும், கற்பித்தல் பணி மேற்கொள்ளவும், கடந்த 25ம் தேதி முதல், தற்காலிக ஆசிரியராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

10 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்பதால், ஏராளமானோர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.

 வேலை வாய்ப்புக்காக தவித்த பட்டதாரிகளுக்கு, இந்த அறிவிப்பு, பெரும் நம்பிக்கையை தந்தது.கோவை மாவட்டத்தில் மட்டும், 3 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவை, கல்வித்தகுதி அடிப்படையில் பிரித்து, அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டன. '

டெட்' தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பிரத்யேகமாக பிரிக்கப்பட்டன.ஆனால், போராட்டத்தை கைவிட்டு, ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால், யாரையும் நிய மிக்கவில்லை.

முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில்,''வரும் காலங்களில் பள்ளிகளில், காலிப்பணியிடங்கள் ஏற்படும் போது, தற்காலிக பணி அடிப்படையில் நிரப்ப, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்,'' என்றார்.