பொதுதேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசுதேர்வுத்துறை தடை விதித்துள்ளது.
பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள், அடுத்த மாதம்நடக்கின்றன. பிளஸ் 2 பொதுதேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது. இந்நிலையில், அரசு தேர்வு துறை, பல்வேறு கட்டுப்பாடுகளைவிதித்துள்ளது.
தேர்வுத்துறை இணை இயக்குனர், சேதுராம வர்மா விதித்துள்ளஅந்தக் கட்டுப்பாடுகள், மாணவர்கள் ஹால் டிக்கெட்களின் பின்பக்கம்அச்சிடப்பட்டு உள்ளது.அதன் விபரம்
பொதுதேர்வில், ஹால் டிக்கெட் இல்லாமல் வந்தால், தேர்வு எழுதஅனுமதி கிடையாது மொபைல் போன், தொலை தொடர்பு மின்னணுசாதனங்களை, தேர்வு மையங்களுக்குள் எடுத்து வரஅனுமதியில்லை.
மாற்று திறனாளி மாணவர்களுக்கு, அரசின் விதிப்படி, உரியசலுகைகள் வழங்கப்படுகின்றன தேர்வர்கள், தங்கள் விடைத்தாளில், ஸ்கெட்ச் பேனா மற்றும் கிரயான்ஸ் போன்ற, வண்ண பென்சில்கள்பயன்படுத்த அனுமதி இல்லை தேர்வர்கள், 'பிட்' வைத்திருத்தல், பிறதேர்வர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாளை பரிமாற்றுதல், ஆள்மாறாட்டம் போன்றவை தேர்வு விதிகளை மீறும் செயல்.
தேர்வர்கள், தாங்கள் எழுதிய விடைகளை, தாங்களே அடித்தல்போன்ற நிகழ்வுகள், ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு, அதற்கானதண்டனை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..