சென்னை:லோக்சபா தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு 100 சதவீதம் அமலாகும் என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாக்யராஜ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

0.05 சதவீதம் வரை வாக்குப்பதிவின் போது தவறு நிகழும் வாய்ப்பு இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் ஒத்துக்கொண்டது. 2013ம் ஆண்டு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

அப்போது நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள ஒப்புதலை தொடர்ந்து, ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

அதனை அமல்படுத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார். சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு நடைமுறை 100 சதவீதம் அமலாகும் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்திருந்தது.

வரக்கூடிய லோக்சபா தேர்தலில் இந்த நடைமுறையை அமல்படுத்த இருப்பதாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் உறுதியளித்தார். அதை ஏற்ற நீதிபதிகள் வழக்கறிஞர் பாக்யராஜ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.


Join Whats App Group Link -Click Here