நெல்லையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்துவிழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில், 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சணல் பைகள் வழங்கப்பட்டன.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ளதூய சவேரியார் மேல் நிலைப்பள்ளியில் உலக சதுப்பு நில தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில், பிளாஸ்டிக் இல்லா நெல்லையை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் எடுத்துரைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுக்குபிளாஸ்டிக் மாற்றாக சணல் பைகள் வழங்கப்பட்டன.

Join Whats App Group Link -Click Here