சென்னை: இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக இருக்கும் என்று பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு உடனே வழங்கப்பட்டது என்றும், அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Join Whats App Group Link -Click Here