தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த ஜனவரி 22–ந் தேதியில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் ஜனவரி 25–ந் தேதியன்று பணிக்கு திரும்பி விட்டனர். பலர் 30–ந் தேதிவரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் அளிக்கக்கூடாது என்று ஏற்கனவே தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் வேலைக்கு வராதவர்களின் பெயரை பட்டியலிட்டு, அவர்கள் வேலைக்கு வராத நாட்களை கருத்தில் கொண்டு சம்பளம் கணக்கிடப்படுகிறது. இதைக் கணக்கிட காலதாமதம் ஏற்படும் என்பதால் 1–ந் தேதி வழங்கப்பட வேண்டிய மாதச் சம்பளம், 4–ந் தேதிதான் வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.