திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவியின், 'காயின் வெண்டிங் மிஷின்' கண்டுபிடிப்புக்கு, 'கூகுள்' நிறுவனம், சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அறிவியலில் ஆர்வமுடைய மாணவர்களை கண்டறிய, அவர்களின் கண்டுபிடிப்பு மற்றும் யோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்க, 'கூகுள்' நிறுவனம், அவ்வப்போது ஆன்லைனில், அறிவியல் சார்ந்த போட்டிகளை நடத்துகிறது.
கடந்தாண்டு, டிச., மாதம் நடந்த போட்டியில், திருப்பூர், மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் ஊக்குவிப்பில், அப்பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவி தர்ஷினி பங்கேற்றார்.
இவர், 'ஏ.டி.எம்., மிஷின்களில் ரூபாய் நோட்டு வருவது போன்று, சில்லரை நாணயங்களை தருவிக்கும் வகையில், 'காயின் வெண்டிங் மிஷின்' கண்டறிந்தார்
இது தொடர்பான, வீடியோ பதிவுகளை, கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தார். இம்முயற்சிக்கு, கூகுள் நிறுவனம் ஒப்புதல் அளித்து, சான்றிதழ் வழங்கியுள்ளது.
அத்துடன், 'உங்கள் யோசனையை உலகுக்கு தெரிவித்தமைக்கு நன்றி' எனவும் தெரிவித்துள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..