போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பெயர் பட்டியலை இணைய தளத்தில் பதிவேற்ற உத்தரவு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் பெயர் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழகபள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 22ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைக் கைவிடுமாறு முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமியும், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் போராட்டத்தைக் கைவிடுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தனர். அதையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் போராட்த்தை முன்னெடுத்து அரசுக்கு சவால் விடுத்து வந்தனர்.


அதையடுத்து போராட்டக்காரர்களை களையெடுக்கும் வகையில் அவர்களில் தேர்தொடுக்கப்பட்ட சிலரை தமிழக அரசு மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு ஊர்களில் பணிஇடைநீக்கம் செய்யத்துவங்கியது. இதையடுத்து போராட்டம் முடிங்கி ஆசிரியர்கள் வழிக்கு வரத்தொடங்கினர்.

இதையடுத்துஜாக்டோ, ஜியோ யூனியன் தலைவர்கள் வேறுவழியின்றிமுதல்வரின் கோரிக்கையை ஏற்று ஜன.30ம் தேதி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில்,ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் பெயர் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பறிபோகலாம் என போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.