*💎💎பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கடந்த 14ம் தேதி தொடங்கிய பொதுத் தேர்வு நேற்றுடன் முடிந்தது*

*💎💎ஏப்ரல் முதல் வாரம் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளன. தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 14ம் தேதி தொடங்கியது*

*💎💎இதில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் படிக்கும் 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 பள்ளி மாணவர்கள், 38 ஆயிரத்து 176 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் பங்கேற்றனர்*

*💎💎இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவியரை விட 6982 மாணவர்கள் கூடுதலாக எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  சென்னை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 678 பேரும், புதுச்சேரியில் 16 ஆயிரத்து 597 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்றனர்*

*💎💎பத்தாம் வகுப்பு தேர்வுக்காக மொத்தம் 3731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு 14ம் தேதி தொடங்கியது*

*💎💎அன்றைய தினம் காலையில் பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வும் இருந்ததால், பத்தாம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வுகள் மதியம் 2 மணிக்கு தொடங்கியது. மற்ற பாடங்கள் வழக்கம் போல காலையில் நடந்தன*

*💎💎பத்தாம் வகுப்பு பாடத் தேர்வுகளில் ஆங்கிலப் பாடத் தேர்வு கடினமாக இருந்தது. அந்த தேர்வு எழுதியதற்கு பிறகு மாணவ, மாணவியர் பெரும்பாலும் பதற்றமாகவே இருந்தனர்*

*💎💎அதற்கு ஏற்ப, கணக்கு, அறிவியல் பாடத் தேர்வுகள் மிகவும் கடினமாக இருந்தன. இதனால் பெரும்பாலான மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாட ஆசிரியர்களும் இதுபோன்ற கடினமாக கேள்வித்தாள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை*

*💎💎மேனிலை வகுப்பில் அறிவியல், கணக்கு, கணினி அறிவியல் பாடப் பிரிவுகளை எடுத்து படிக்க விரும்பிய மாணவ, மாணவியர், கடினமான கேள்வித்தாள்களால் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போதிய மதிப்பெண் எடுக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், மேனிலை வகுப்பில் விரும்பிய பாடப் பிரிவு கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர்*

*💎💎இந்த பரபரப்புகளுக்கு இடையே பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. இதையடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில் விடைத்தாள் திருத்தும் பணியை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தொடங்க உள்ளது*