*♦♦பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது*
*♦♦மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 19ம் தேதி முடிந்தது. பிளஸ்1 தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கி 22ம் தேதியுடன் முடிந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த 14ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தன*
*♦♦மேற்கண்ட 3 வகுப்புகளுக்கான தேர்வுகளில் மொத்தம் 25 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் 70 மையங்களில் விடைத்தாள்களை திருத்த தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது*
*♦♦மேனிலை வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் ஒரு மையத்துக்கு சுமார் 300 ஆசிரியர்கள் வீதம் 21 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். முதன்மைத் தேர்வர்கள் நேற்று முறைப்படி பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தினர். இன்று உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவார்கள்*
*♦♦அதற்கு பிறகு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவார்கள். இதன்படி பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடரும்*
*♦♦ஏப்ரல் 15ம் தேதிக்குள் அவற்றை திருத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேற்று முடிந்தன. இதற்கான விடைத்தாள்களுக்கு டம்மி எண்கள் போடும் பணி தற்போது நடக்கிறது*
*♦♦ஏப்ரல் 1ம் தேதி பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் தமிழகம் முழுவதும் உள்ள 75 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஏப்ரல் 1ம் தேதி முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்த உள்ளனர்*
*♦♦ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவார்கள். பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் அனைத்தும் ஏப்ரல் 11ம் தேதிக்குள் திருத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது*
*♦♦நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்க இருப்பதால் அதற்கு முன்னதாக விடைத்தாள் திருத்தும் பணிகளை முடித்தால்தான், தேர்தல் பூத்கள் பள்ளிகளில் அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, விரைவாக விடைத்தாள் திருத்தும் பணி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது*
*♦♦இந்நிலையில், சென்னையில், மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்மேனிலைப் பள்ளி, அண்ணா நகரில் உள்ள ஜெசிமோசஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகியவற்றில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..