ஜாக்டோ - ஜியோ'போராட்டத்தை இரும்புக்கரம்கொண்டு அடக்கியதால்,ஆசிரியர்களும், அரசுஊழியர்களும், அ.தி.மு.க.,அரசு மீது கடும் கோபத்தில்உள்ளனர். அப்போதே, 'தேர்தலில் எங்கள்வலிமையை காட்டுவோம்'என, வெளிப்படையாகஎச்சரித்தனர்
ஆனாலும், இவர்களின்எதிர்ப்பை சமாளிக்கும்வகையில், முதன் முதலாக,பல்கலை பேராசிரியர்கள்,ஊழியர்களை தேர்தல்பணிக்கு களம் இறக்குவதுஉள்ளிட்ட பல்வேறுவியூகங்களை, அ.தி.மு.க.,அரசு எடுத்தது.அதேநேரம்ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் தரப்பில், 12 லட்சம்ஓட்டுகளையும், சிந்தாமல்,சிதறாமல் அள்ள வேண்டும்என, தற்போது மறைமுகபிரசாரம் செய்யப்பட்டுவருகிறது.'அரசு என்னவியூகம் வகுத்தாலும், இ.டி.சி., -எலக் ஷன் டூட்டி சர்ட்டிபிகேட் -என்ற தேர்தல் பணி சான்றைவாங்க மறவாதீர்கள். அதில்தான் சூட்சுமம் உள்ளது' என,தீவிர பிரசாரத்தில்ஈடுபட்டுள்ளனர், அரசுஊழியர்கள்.
இது குறித்து, அவர்கள்கூறியதாவது:
எப்படியும், 99 சதவீதம்ஆசிரியர்கள், அரசுஊழியர்கள், அதே லோக்சபாதொகுதியில் தான் பணிபுரியவேண்டி வரும். அதேநேரம்,இது லோக்சபா தேர்தல்என்பதால், தொகுதிக்குஉட்பட்ட ஆறு சட்டசபைதொகுதிக்குள் தான்பணிபுரிய வேண்டியிருக்கும்.எனவே, இ.டி.சி.,யைமறக்காமல், ஓட்டுச்சாவடிதலைமை அலுவலரிடம்பெற்று சென்று விடுங்கள்.அச்சான்று மூலம், நீங்கள்பணியாற்றும்மையத்திலேயே, உங்கள்ஓட்டை அளிக்கலாம். எனவே,வாக்காளர் வரிசை எண், ஓட்டுமைய விபரத்தை தெரிந்துவைத்து, இ.டி.சி.,யை பெற்று,பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.நீங்கள்பணிபுரியும் மையத்தில்,ஓட்டளித்து, இ.டி.சி., மூலம்ஓட்டளித்தவர் விபரத்தையும்,ஓட்டு கணக்கு விபரபடிவத்தில், மொத்த ஓட்டுகள்எண்ணிக்கை விபரத்தையும்குறிப்பிட்டு விடுங்கள் என,அறிவுறுத்தி வருகிறோம்.இதன்மூலம், 2 லட்சம்ஆசிரியர்கள், 10 லட்சம் அரசுஊழியர்களின் ஓட்டுகளில்ஒன்றைக் கூட வீணாக்கக்கூடாது என, சபதம்எடுத்துள்ளோம்.இவ்வாறுஅவர்கள் கூறினர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..