சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி பொது விடுமுறை வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல், மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அன்றைய தினம் தமிழகம் முழுக்க அரசு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

தேர்தலின்போது இது வழக்கமான நடைமுறை என்றாலும் அதை முறைப்படி அறிவிக்க வேண்டியதால், தமிழக அரசு இந்த அரசாணையை பிறப்பித்துள்ளது.

மதுபோதையில் நடக்கும் குற்றங்கள்.. அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது... நீதிபதிகள் கேள்வி

இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.