பிளஸ் 2 பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. வரும் ஏப்.19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
தமிழக பள்ளி கல்வித் துறையின் சமச்சீர் பாடத் திட்டத்தின்படி பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் ஆகிய சில பாடங்களைத் தவிர மற்றவை எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர் எழுதினர்.
இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..