சென்னை: தமிழகம் முழுவதும் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளும் வரை, தற்காலிகமாக விஏஓக்கள் செயல்படுவார்கள் என அறிவித்துள்ளது. மேலும் விஏஓ.க்களை தேர்தலில் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.