தேர்தல் பணிச்சுமை காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இப்போது தொடங்கியுள்ளன.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கிய நிலையில், தொடர் பணிச்சுமையால் தேர்வு முடிவுகளை ஒத்திவைக்க முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தல் காரணமாக ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பிளஸ்2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் இப்போது தொடங்கிஉள்ளன. இதுதவிர மாணவர்களுக்கான நீட் பயிற்சி, ஆசிரியர்களுக்கான கற்றல் பயிற்சி தரப்பட்டுள்ளன.இத்தகைய தொடர் பணிச்சுமைகளுக்கு இடையே ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது.

இந்த சூழலில் குறைந்த கால அவகாசத்தில் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வுத்துறை அழுத்தம் தருகிறது. இதற்கு சற்றே கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்.அதற்கேற்ப தேர்வு முடிவுகளை சில நாட்கள் ஒத்தி வைக்க அரசு முன்வர வேண்டும்.’’என்றனர். இதற்கிடையே பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 3 மதிப்பெண் கேள்வி ஒன்றில் கிளர்வுறும் ஆற்றல் என்ற வார்த்தைக்கு பதில் ஆற்றல் என்ற வார்த்தை மட்டுமே இருந்தது. இதையடுத்து அந்த கேள்விக்கு கருணை மதிப்பெண்ணாக 3 மார்க் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here