பிளஸ் 2, சி.பி.எஸ்.இ., கணக்கு பதிவியல் தேர்வில், வினாத்தாளில் ஏற்பட்ட வாக்கிய பிழையால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு நடந்து வருகிறது. கணக்கு பதிவியல் என்ற, 'அக்கவுன்டன்சி' பாடத்திற்கான தேர்வு, நேற்று நடந்தது.
இந்த தேர்வில், முந்தைய ஆண்டுகளை விட, வினாத்தாள் எளிதாக இருந்தது.பல கேள்விகள், நீண்ட விடை எழுதும் வகையில் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல, பல கேள்விகள், புத்தகத்தில் இருந்து நேரடியாக வந்ததால், மாணவர்கள் எளிதாக பதில் அளிக்க முடிந்தது.
அதேநேரம், வினாத் தாளில் ஏற்பட்ட வாக்கிய பிழையால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
ஒரு கேள்விக்கு, 'அறிந்து கொள்ளும் கணக்கு' என்பதற்கு பதில், 'மறுமதிப்பீட்டு கணக்கு' என்ற பொருளில், ஆங்கில வார்த்தை இடம் பெற்றது. இந்த பிழையால், மாணவர்கள் பதில் எழுத தாமதம் ஏற்பட்டது.
பின், வாக்கிய பிழை என தெரிந்து, பதில் எழுதினர்.
இதற்கிடையே, சி.பி.எஸ்.இ., தேர்வில், கணக்கு பதிவியல், வேதியியல், புவியியல், கணிதம் உள்ளிட்டவற்றுக்கான வினாத்தாள் என்ற பெயரில், சில புகைப்படங்கள், ஆன்லைனில் வெளியாகின. இது குறித்து, சி.பி.எஸ்.இ., தரப்பில், டில்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
'மாணவர்கள், இதுபோன்ற ஆன்லைன் தகவல்களை நம்ப வேண்டாம். அவை போலியானவை' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..