5ஜி தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பமாக இருக்கிறது. தற்போதைய 4ஜி எல்.டி.இ. நெட்வொர்க்களை விட 5ஜி சேவையை பயன்படுத்தும் போது டவுன்லோடு வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஷாங்காய் மாவட்டத்தில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் நெவொர்க் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சைனா மொபைல் சார்ந்து 5ஜி நெட்வொர்க் சோதனை ஷாங்காயின் ஹாங்கௌவில் துவங்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 5ஜி பேஸ் ஸ்டேஷன்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சேவையை துவங்கி வைத்த ஷாங்காய் மாவட்ட துணை மேயர் வு கிங் 5ஜி சேவையில் முதல் வீடியோ கால் மேற்கொண்டார். இதற்கு அவர் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினார்.
சீராக இயங்க துவங்கும் போது பயனர்கள் தங்களது சிம் கார்டுகளை அப்டேட் செய்யாமல் புதிய நெட்வொர்க் சேவையை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
5ஜி சேவை மையங்கள் சீனாவின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகின்றன. ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், ஹூவாய் சீன அரசாங்கத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென ஹூவாய் தெரிவித்துள்ளது.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here