இந்தியா மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்கள் மற்றும் பிரைவேட் மெசேஜ்களில் போலியான செய்தியை வாட்ஸ் ஆப் பயனர்கள் பரப்பி வருகின்றனர். இந்த போலி வாட்ஸ் ஆப் செய்தி குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
என்ஆர்ஐ வாக்கு பதிவு
நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் என்ஆர்ஐ-கள் தங்களை வாக்காளராக பதிவு செய்துகொள்ளலாம் என்று அண்ட் மெசேஜ் தெரிவித்துள்ளது. தேர்தலில் வாக்காளராக தங்களை பதிவு செய்துகொள்ள eci.gov.in என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்துகொள்ளுங்கள் என்ற போலி செய்தி பரவி வருகிறது.

ஷெய்ஹலி ஷரன்
இந்த போலி செய்தியை பற்றி தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்ஹலி ஷரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பும் வாக்காளர்கள் http://nvsp.in என்ற தளத்தின் மூலம் மட்டுமே பதிவு செய்துகொள்ள முடியுமென்று தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட்
வெளிநாட்டு வாக்காளர்கள் அடையாள ஆவணமாக தங்களின் பாஸ்போர்ட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாக்குப்பதிவு கிடையாது
ஆன்லைன் மூலம் எந்த வாக்காளருக்கும் வாக்குபதிவிட அனுமதி கிடையாது என்றும் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி வாட்ஸ் ஆப் இல் பரவி வரும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here