பெண் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள வாக்குச்சாவடிகளிலேயே பணி வழங்க வேண்டும் என அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை வெள்ளிக்கிழமை சந்தித்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் த. ஜீவன்ராஜ், இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ஆ. மதலைமுத்து, உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செய்தித் தொடர்பாளர் இரா. மணவாளன், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் ஆ. சந்திரபோஸ் ஆகியோர் அளித்த மனு: தேர்தல் பணியில் ஈடுபடுவோரில் 80 சதவிகிதம் பேர் பெண் ஆசிரியர்களாக இருப்பதால் வாக்குச்சாவடிப் பணிகளை அருகிலேயே வழங்கிட வேண்டும்.

வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து தர வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முதல் நாள் பயிற்சியின்போதே அஞ்சல் வாக்குக்கான படிவங்களை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், அறுவைச் சிகிச்சை முடித்துள்ளோர், கைக்குழந்தை வைத்திருப்போர், தொடர் மருத்துவச் சிகிச்சையில் இருப்போருக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
கூடுதல் ஒதுக்கீட்டில் பணிக்குச் செல்வோருக்கு அந்த வாக்குச்சாவடியிலேயே மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here