தனியார் பள்ளிகளுக்கு நிகராக உள்ள அரசு பள்ளிகளில், பெற்றோர், தங்களது குழந்தைகளை சேர்க்க முன்வரவேண்டும்' என, மாவட்ட கல்வி அலுவலர் பேசினார்

திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் நடுநிலைப் பள்ளியில், சீர்வரிசை, புதிய மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் நடந்தது

பெற்றோர், பள்ளிக்கு, பிரின்டர், டிவிடி பிளேயர், ஆம்பிளிபர், நாற்காலி, பாய், சில்வர் குடங்கள், தண்ணீர் டிரம், நோட்டு புத்தகங்கள் உள்பட, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கினார்

மேலும், 11 புதிய மாணவர்கள் சேர்த்தனர். பள்ளி சீர்வரிசை, புதிய மாணவர்களின் ஊர்வலத்தை, திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் லோகமணி துவக்கி வைத்தார்
மங்கள மேளத்துடன் துவங்கிய ஊர்வலம், பள்ளி நுழைவு வாயில் அடைந்தது

அப்போது புதிய மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.பின், மாவட்ட கல்வி அலுவலர் லோகமணி பேசியதாவது:இப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறை உள்ளது. இங்கு பணிபுரியும், அனைவரும் பெண் ஆசிரியர்கள்

♦♦தனியார் பள்ளிக்கு நிகராக உள்ள இப்பள்ளியில், ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை சேர்ப்பதுடன், அவர்கள், தலா, 10 மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்