நடந்து முடிந்த பிளஸ்1, பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கான உடனடித் தேர்வு ஜூன் மாதம் நடக்க இருக்கிறது


அதற்காக விண்ணப்பிக்க ஏற்கனவே தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன


அந்த தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், ஜூன் மாதம் நடக்க உள்ள சிறப்பு துணைத் தேர்வு எழுத கடந்த 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது

அப்படி அறிவிக்கப்பட்ட நாட்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டம் என்னும் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்


 அந்தந்த கல்வி மாவட்டத்தில் உள்ள தேர்வுத்துறையின் சேவை மையங்களில் 15ம் தேதி  மற்றும் 16ம் தேதிகளில் நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்


 தேர்வுத்துறை சேவை மையங்கள் தொடர்பான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here