தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்த தகவல்:
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு வரும் ஜுன் 6-ஆம் தேதி தொடங்கி ஜுன் 13-ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 வரையிலும், பழைய வினாத்தாளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 21-ஆம் தேதி முடிவடைகிறது. காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும். இதேபோன்று பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றார்
click here time table
1 Comments
NEET 2019: NEET EXAM TIPS SUCCESS - தோ்வா்களை தயாா் படுத்திக்கொள்ள எளிய வழிகள் !!
ReplyDeletePost a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..