தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகளை ஏப்ரல் 19ஆம் தேதியன்று வெளியிடக் கூடாது என ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


நடந்துமுடிந்த 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 19 தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ஏப்ரல் 19ஆம் தேதியன்று முடிவுகளை வெளியிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நாள் என்பதால் வாக்குச் சாவடி பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்புவது கடினம்.

எனவே பள்ளி தேர்வு முடிவுகளை மாற்றுத் தேதியில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here