*தேர்தல் பணியின் போது உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் நிவாரண நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்தி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது*

*இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை அளித்த பேட்டி*

*தேர்தல் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது*

*இதுபோல் தேர்தல் பணியில் இருக்கும் ஒருவர், பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தால் அவரது குடும்பத்துக்கு வழக்கமாக வழங்கும் நிதி ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது*

*இந்த நிதி உயர்வின் அடிப்படையில், தமிழகத்தில் தேர்தல் பணியின் போது உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு விரைவாக நிதியுதவி அளிக்கப்படும்*

*சில இடங்களில் வாரிசு யார் என்ற ஆவணங்களைப் பெற வேண்டிய நிலை உள்ளதால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது*