கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கையின்போது, மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 வகுப்பில் முக்கிய பாடங்களில், மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குநர் சாருமதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு, பிளஸ் 1 பாடம், பொதுத் தேர்வாக அறிமுகமாகியுள்ளது. அதன்படி, பிளஸ் 1-இல் அனைத்துப் பாடங்களிலும், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 தேர்ச்சி செல்லுபடியாகும். எனவே, இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள், சென்ற கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here