பத்தாம் வகுப்பு தேர்வர்கள், எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வியாழக்கிழமை ( மே 2) முதல் சனிக்கிழமை (மே 4) மாலை 5.45 மணி வரை பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?: மறுகூட்டலுக்கு மொழிப்பாடத்துக்கு (பகுதி 1)- ரூ.305, ஆங்கிலப் பாடத்துக்கு (பகுதி- 2)- ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா ரூ.205, விருப்ப மொழிப் பாடத்துக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்களிலும் பணமாகச் செலுத்த வேண்டும். அப்போது கொடுக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here