தமிழகம் மற்றம் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

அதில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை பொறுத்தவரையில் 88.57 சதவிகிதமும், மாணவிகள் 93.64 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் திருப்பூர் 95. 37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

ஈரோடு 95.23 சதவிகித தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும், பெரம்பலுர் 95.15 சதவிகித தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேசமயம் 1,281 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளன.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here