சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவினை வரும் 19-ந்தேதி காலை 9.30 மணிக்கு வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வினை எழுதினார்கள். இவர்களின் வினாத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதையடுத்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவினை ஏப்ரல் 19-ந்தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப் போவதாக பள்ளி கல்வித்துறை தேர்வுக்கு முன்பே அறிவித்து இருந்தது. இப்போது இதற்கான ஆயத்த பணிகளில் அரசு தேர்வுத்துறை மும்முரமாக செய்து வருகிறது.


கடந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில்,குறு செய்தி மூலம் மடடுமே வெளியிடப்படுகிறது. அதன்படியே இநத ஆண்டும், தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதன்படி ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு தமிழகத்தில் வெளியாவது உறுதியாகி உள்ளது. மாணவர்கள் அளித்த கைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnesults.nic.in, www.dge.tn.nic.in, dge.tn.gov.in இணையதளத்திலும் காணலாம்.பள்ளிகளுக்கும் ஆன்லைன் வழியாக மாணவர்களின் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here