டில்லி:
நாடு முழுவதும் சிபிஎஸ்இ கல்வி பாடத்திட்டத்தில் படித்துதேர்வு எழுதியுள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 3வது வாரத்தில் வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.
தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்து விரைவில் இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ வாரிய செயலாளர் அனுராஜ் திரிபாதி கூறி உள்ளார். 12ம் வகுப்பு தேர்வு முடிவு மே மாதம் 13 முதல் 17ந்தேதிக்குள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் 10வது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவித்து உள்ளார்.
மேலும், சி.பி.எஸ்.இ. தேர்வு மதிப்பெண் சரிபார்த்தல், விடைத்தாள் கோருதல், மறு மதிப்பீடு, தனித் தேர்வர்களுக்கான தேர்வு ஆகியவற்றுக்கான கட்டண விவரங்களை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியான பின் மதிப்பெண் சரிபார்த்தலுக்கு ஒரு பாடத்துக்கு 500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் கோரும் மாணவர்கள் ஒரு தாளுக்கு 12-ம் வகுப்புக்கு 700 ரூபாயும், 10-ஆம் வகுப்பு 500 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மதிப்பீட்டுக்கு ஒரு கேள்விக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தனித் தேர்வர்கள் தேர்வு விண்ணப்பக்கட்டணமாக 300 ரூபாயும், தேர்வுக்கட்டணமாக 5 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here