இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கான 42 உதவி மையங்களின் பெயர்களை தொழில்நுட்பகல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.இன்ஜினியரிங் கவுன்சலிங்கை இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது*

*இந்நிலையில் இன்ஜினியரிங் கவுன்சலிங் விண்ணப்பித்தல், விருப்ப கல்லூரியை தேர்வு செய்வதல், சான்றிதழ் சரிபார்ப்புக்கான 42  இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது*

*இன்ஜினியரிங் கவுன்சலிங்குக்கு மாணவர்கள் வீட்டிலிருந்தபடியும் இணையதளம் மூலம் மே 2ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்*

*இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் இணையதளத்தில்  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் சமர்ப்பிக்கலாம்*

*பெரிய மாவட்டம் அல்லது பெருநகரத்துக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உதவி மையங்கள்,  சிறிய மாவட்டத்துக்கு ஒரு உதவி மையமும் அமைக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்*

*இணையதளத்தில் விண்ணப்பித்தாலும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும்*

*மாவட்ட வாரியாக 42 இன்ஜினியரிங் உதவி மையங்களின் பெயர்கள் வருமாறு*

*சென்னை: தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி. கடலூர்: திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி விருதாச்சலம் மற்றும் போக்கல்டி ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். காஞ்சிபுரம்: பச்சையப்பாஸ் பெண்கள் கல்லூரி மற்றும் ஐஆர்டி பாலிடெக்னிக் கல்லூரி குரோம்பேட்டை.திருவள்ளூர்: முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆவடி.திருவண்ணாமலை: அரசு பாலிடெக்னிக் கல்லூரி செய்யாறு.வேலூர்: தந்தை பெரியார் அரசு தொழில் நுட்பக் கழகம், பாகாயம். விழுப்புரம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர்  அரசு பாலிடெக்னிக் கல்லூரி*

*கோயம்புத்தூர்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி பீளமேடு, அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி புதுசித்தாபுதூர் மற்றும் கோயம்புத்தூர் இன்டிட்யூட் ஆப் டெக்னாலஜி.தர்மபுரி: செட்டிகரையில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி, ஈரோடு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பெருந்துறை ஆகிய இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது*

*கிருஷ்ணகிரி: பர்கூரில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி. நாமக்கல்: என்கேஆர் அரசு பெண்கள் கலைக்கல்லூரி.நீலகிரி: ஊட்டி அரசுக் கலைக்கல்லூரி.சேலம்: கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி. திருப்பூர்: சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி. கரூர்: தான்தோனிமலையில் உள்ள அரசுக் கலைக்கல்லூரி*

*மதுரை: திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி. ராமநாதபுரம்: இளையான்குடி அருகே உள்ள அரசு அரசுக் கலைக்கல்லூரி, தேனி: போடிநாயக்கனூரில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி.திண்டுக்கல்: கரூர் ரோட்டில் அமைந்துள்ள ஜிடிஎன் கலைக்கல்லூரி*

*அரியலூர்: கீளப்பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி. நாகப்பட்டினம்: பால்பண்ணைசேரியில் அமைந்துள்ள வாலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி.பெரம்பலூர்: கிழக்கனவாயில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி.புதுக்கோட்டை: அறந்தாங்கியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி*

*தஞ்சாவூர்: ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செங்கிபெட்டியில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி. திருச்சி: ரங்கத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் துவாக்குடிமலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி*

*திருவாரூர்: வலங்கைமானில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி.சிவகங்கை: காரைக்குடியில் உள்ள ஏசி அரசு இன்ஜினியரிங் கல்லூரி. கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள சவுத் திருவாங்கூர் இந்து கல்லூரி, திருநெல்வேலி: அரசு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி*

*தூத்துக்குடி: அரசு பாலிடெக்னிக் கல்லூரி, விருதுநகரில்  வி.வி.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியிலும் இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது*