பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த அஞ்சலி தேவி என்பவரது மகள் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த நிலையில், பள்ளி வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் அந்த சிறுமி உயிரிழந்தார்

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு பள்ளி வாகனத்தில் நடத்துனர் இல்லாததே காரணம் என கூறி, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியும், பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அஞ்சலிதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மேலும் தமிழ்நாடு மோட்டார் விதி மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி பள்ளி வாகனத்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனைத்து பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்

இதற்கு பள்ளி வாகனங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும் பல பள்ளிகளில் இந்த குழு அமைக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்யவதற்காக பள்ளிகளில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதா என்றும், அதன் தற்போதைய நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்

மேலும் இதுகுறித்து தொடக்க கல்வி இணை இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு ஏப்., 29ம் தேதிக்குள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது